சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் தேர்தல் பணிகளின் போது சிறப்பாக செயல்பட்டு பங்களிப்பு வழங்கிய தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகளை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காவல்துறை படைத்தலைவர் (DGP). மகேஷ் குமார் அகர்வால், ஐபிஎஸ் அவர்கள், அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மிக்க பணியை அங்கீகரிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். பாராட்டு சான்றிதழ் பெற்றவர்களில் தொழில்நுட்ப பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் (DSP-T) ரகுராமன் மற்றும் பரிமளா தேவி ஆகியோர் இடம்பெற்றனர்.
மேலும், தொழில்நுட்ப பிரிவு காவல் ஆய்வாளர்கள் (Inspector-T) ராஜாராம், ஞானமுருகன், விஜயகுமார் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் (SI-T) ராஜா, அலெக்ஸ் பாண்டியன், நிகில் தேவேந்திரன், ரேஷ்மா ஆகியோரும் பாராட்டு சான்றிதழ்களைப் பெற்றனர். பாராட்டு சான்றிதழ் பெற்ற அதிகாரிகள் அனைவரும் காவல் துணைத்தலைவர் (தொழில்நுட்ப சேவைகள்) திருமதி ஜெயலட்சுமி, ஐபிஎஸ் அவர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக் கொண்டனர். தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு, காவல்துறையின் தொழில்நுட்ப சேவைகளை திறம்பட செயல்படுத்திய அதிகாரிகளின் பணி பெரிதும் பாராட்டப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















