திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகரத்தில் உள்ள காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் புலன் விசாரண, நிலுவையில் உள்ள வழக்குகள், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது, மற்றும் நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையர் V.வினோத் சாந்தாராம், (கிழக்கு), காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















