கடலூர்: கடலூர் மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடித்ததற்காக, காவல் துணைக்கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் ,உதவி ஆய்வாளர்கள், மற்றும் காவலர்களைப் பாராட்டி அவர்களுக்கான சான்றிதழ்களை மதிப்பிற்குரிய கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர் திரு. ஜெயக்குமார் ஐபிஎஸ் அவர்கள் வழங்கினார்கள்.
இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் எப்போது தூங்க செல்வார் என்றே தெரியாத நிலையில் மாவட்டத்தை சுற்றி சுற்றி வந்து காவல்துறையினரை ஊக்கப்படுத்தியும், சரியான வழிக்காட்டுதல்களையும் கொடுத்து,
காவலர்கள் சுதந்திரமாக பாரபட்சமின்றி, தைரியமாக பணிபுரியவும் செய்தார்கள். மாவட்டம் அன்று அமைதியாக இருந்ததற்கும், இருப்பதற்கும் அவர்களின் அயராத உழைப்புதான் காரணம். எல்லாப்புகழும் எஸ்.பி சார் அவர்களுக்கே. அவர்களின் கீழ் பணியாற்றி வருவதில் பெருமைக்கொள்கிறேன்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















