கடலூர்: கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு சரகம் பத்திரக்கோட்டை பகுதியில் 2 வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், IPS உத்தரவின் பேரில் காவல்துறை தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டது. இந்நிலையில், அருகிலுள்ள பகுதியில் குழந்தை அழுது கொண்டிருப்பதை கவனித்த அன்பு (22). என்ற இளைஞர், குழந்தையை பாதுகாப்பாக மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தார். பின்னர் குழந்தை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, நலமுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. காவல்துறையின் துரித நடவடிக்கையும், இளைஞர் அன்பின் விழிப்புணர்வும் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா



















