திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் தண்டபாணி சாமிகள் மடம் இருந்து வந்தது. 1.40ஏக்கர் பரப்பளவுள்ள அந்த இடத்தில் தற்போது மடம் இல்லாமல் காலி உள்ள அந்த நிலம் பழனி கோவில் கட்டுப்பாட்டில் வைக்கப் பட்டுற்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 100கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த இடத்தை தனிநபர்கள் பெயரில் கிரையம் செய்து முறைகேடாக பத்திரப்பதிவும் செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நிலமோசடி வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தற்போது இடத்தை விற்பனை செய்த விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, பப்பன்குளம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் வெள்ளைத்துரை (60). பழனி கவுண்டன்குளம், ஏ.சி.சி. சாலை பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அன்வர்தீன்(65). விழுப்புரம் மாவட்டம், சாலாமேடு, காமராஜர் நகரை சேர்ந்த தண்டபாணி என்பவர் மகன் முருகதாஸ் (56). ஆகிய 4பேரை சிபிசிஐடி போலிசார் கைது செய்து, நால்வர் மீதும் BNS பிரிவுகள் 318(4), 336(3), 340(2), 49 மற்றும் 61(2) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















