கடலூர்: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த ஜெய்னுலாப்தீன் (28). என்பவர் சிதம்பரம் செல்வதற்காக திண்டுக்கல் இரயில் நிலையத்தில் மஹால் எக்ஸ்பிரஸ் இரயிலில் ஏறினார். அப்போது, தங்க நகைகள் இருந்த தனது பையை நடைமேடையில் தவறுதலாக மறந்து வைத்துவிட்டு ரயிலில் ஏறியதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் பையை மறந்து விட்டதை உணர்ந்த ஜெய்னுலாப்தீன், உடனடியாக திண்டுக்கல் ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் வீரம்மாள் தலைமையில் காவலர்கள் ராஜா சந்திரசேகரன், மருதராஜா, விஜயகுமாரி, தனபுஷ்பம், லோகேஷ் மற்றும் சரண்யா தேவி ஆகியோர் திண்டுக்கல் இரயில் நிலைய நடைமேடை எண்-3 பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, மோதிரம், கைச்செயின், தோடு உள்ளிட்ட சுமார் 28.5 கிராம் தங்க நகைகள் இருந்த பையை போலீசார் பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் ஜெய்னுலாப்தீனை வரவழைத்து, அவரது நகைகள் மற்றும் பையை போலீசார் ஒப்படைத்தனர். இரயில்வே போலீசாரின் விரைவு நடவடிக்கைக்கு பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















