திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் தலைமையில், வாணியம்பாடி துணைக் காவல் கண்காணிப்பாளர் திருமதி. மகாலட்சுமி அவர்கள் மற்றும் காவல் அலுவலர்கள் இணைந்து, வாணியம்பாடி பேருந்து நிலையம் முதல் சி.எல். ரோடு வரை தீவிர நடை ரோந்து மேற்கொண்டனர். நடை ரோந்தின்போது கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் CCTV கேமராக்களை கட்டாயம் பொருத்தி செயல்பாட்டில் வைத்திருக்கவும், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கவும், போதைப்பொருள், கஞ்சா, குட்கா உள்ளிட்ட சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், பொதுமக்களின் குறைகள் கேட்டறியப்பட்டு, பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.




















