கிருஷ்ணகிரி: ஓசூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னத்தூர் கிராமத்தை சேர்ந்த சோலையப்பன் என்பவர் அவரது பெற்றோருடன் வசித்து வருவதாகவும், அவர் மேஸ்திரி வேலை செய்து வருவதாகவும், (18.07.2026) அன்று அதிகாலை சுமார் 04.30 மணியளவில், வேலைக்குச் செல்வதற்காக ஓசூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, குற்றவாளி கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்து பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றதாகவும், இது குறித்து சோலையப்பன் ஓசூர் டவுன் காவல் நிலையம் சென்று அளித்த புகாரின் பேரில் போலீசார் குற்றவாளியை கைது செய்து அவரிடமிருந்து பணம் மற்றும் பட்டன் செல்போன் பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. J.ஆண்டனி பாபு




















