கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உட்கோட்டத்திற்குட்பட்ட ஓசூர் நகர காவல் நிலையத்தில், கடந்த (20.12.2023) அன்று பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த ஜாமீனில் விட முடியாத கைது வாரண்ட் (NBW – Non-Bailable Warrant) (18.07.2026) காவல்துறையினரால் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு மாண்புமிகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், நீதிமன்ற உத்தரவின்படி அவர் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.




















