திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பூம்பாறை பகுதியில் தனியார் விடுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொக்கைன், மெத்தப்பட்டமைன், கஞ்சா, போதைஸ்டாம்பு உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து விடுதி உரிமையாளர் போதிசாத்விக்நாத் என்பவரை கைது செய்தனர். மேலும் இது குறித்து திண்டுக்கல் மாவட்ட போதை பொருள் தடுப்பு DSP.கார்த்திக் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கம்பத்தை சேர்ந்த பிரிதிவிராஜன்(29). பாலக்காடு சேர்ந்த சுமேஷ்(23) சென்னையைச் சேர்ந்த ஹரிஹரன்(26). புதுக்கோட்டையை சேர்ந்த விக்னேஸ்வரன்(30). ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து போதை ஸ்டாம்புகள், 1/2 கிலோ கஞ்சா, 2 பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன இவர்கள் போதைப்பொருட்கள் பண பரிமாற்றத்திற்கு கிரிப்டோ கரன்சி, டெலிகிராம், சூப்பர் மணி, பிளாக் நெட், மேஜிக் நெட் உள்ளிட்ட அப்ளிகேஷனை பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் அந்த தனியார் விடுதிக்கு வருவாய்துறையினர் சீல் வைத்துள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















