திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு புலனாய்வு சம்பந்தமாக 4 நாட்கள் சிறப்பு புத்தாக்க பயிற்சி வகுப்பு (25.05.2026) அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டது. இந்த புத்தாக்க பயிற்சியானது, காவல்துறையினரின் புலனாய்வு பணிகளில் முன்னேற்றம் ஏற்படுத்தும் வகையில், புதிதாக அமல்படுத்தப்பட்ட சட்டப்பிரிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ்,
சந்தேக மரண வழக்குகள், மதுவிலக்கு வழக்குகள், சிறு காயம் மற்றும் கொடுங்காய வழக்குகள், விபத்து வழக்குகள் ஆகியவற்றின் புலன் விசாரணையினை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்புகளை, மாவட்டத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள் நிலையில் உள்ள அலுவலர்கள் நடத்த உள்ளனர். இப்பயிற்சிக்கு மாவட்டத்தை சேர்ந்த 54 தலைமை காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு புலனாய்வு சம்பந்தமான நுணுக்கங்களையும், தெளிவுரைகளையும் வழங்கி அதன் மூலம் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கித் தரும் முனைப்புடன் இந்த பயிற்சி தொடர்ந்து நடத்தப்பட உள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















