இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வரும் காவலரின் குடும்ப உறுப்பினரின் மருத்துவச் சிகிச்சைக்காக வழங்கப்பட்ட மருத்துவ உதவித்தொகையை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜி. சந்தீஷ், ஐ.பி.எஸ். அவர்கள் வழங்கினார். காவலரின் குடும்ப உறுப்பினருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்காக காவல்துறை நலத்திட்டத்தின் கீழ் ரூ.50,000 மதிப்பிலான உதவித்தொகை ஒதுக்கப்பட்டிருந்தது.
அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் வழங்கி, குடும்பத்தினரின் உடல்நலம் விரைவில் குணமடைய வாழ்த்துத் தெரிவித்தார். காவல்துறையினரின் நலன் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலனில் தமிழக காவல்துறை தொடர்ந்து அக்கறையுடன் செயல்பட்டு வருவதன் ஒரு பகுதியாக இந்த உதவித்தொகை வழங்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி




















