திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம், தடியம்பட்டி பகுதியில் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான காற்றாலைகள் அமைந்துள்ளன. இதில் ஒரு காற்றாலையில் கடந்த ஜனவரி மாதம் மர்மநபர்கள் அங்கிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பிகளை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து அந்நிறுவனத்தின் மேலாளர் தேவர்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இச்சம்பவத்தில் தொடர்புடைய கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் அருகே உள்ள கருங்கல் பகுதியைச் சேர்ந்த வர்கீஸ் மகன் சஜின் (30). என்பவரை கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















