சிவகங்கை: போக்குவரத்து துறையின் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வை தேவகோட்டை சப்-கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், காரைக்குடி ஏஎஸ்பி ஆஷிஸ் புனியா மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அனிதா ஆகியோர் மேற்கொண்டனர். ஆய்வுக்கு வந்த 192 பள்ளி வாகனங்களில் 29 வாகனங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவற்றை உடனடியாக சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டது.
மேலும், முதலுதவி பெட்டி பராமரிப்பு, ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் கட்டாயமாக அடையாள அட்டை அணிதல், தீயணைப்பு கருவிகள் பராமரிப்பு, அவசரகால கதவுகள் செயல்பாட்டில் வைத்திருத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து தடுப்பு மற்றும் முதலுதவி செயல்முறை குறித்து விளக்கக் காட்சி நடத்தப்பட்டதுடன், வாசன் ஐ கேர் கண்மருத்துவமனை சார்பில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு கண் பரிசோதனை முகாமும் நடைபெற்றது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















