திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியைச் சேர்ந்தவார் இசக்கியப்பன் (30). தனியார் பொறியியல் கல்லூரியில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் இவர் (20.02.26) அன்று காலை கோபாலசமுத்திரம் பகுதியில் இருந்து மாணவர்களை பேருந்தில் ஏற்றிக் கொண்டு வந்த போது இசக்கியப்பன், மது போதையில் இருந்துள்ளார். சுத்தமல்லி அருகே உள்ள விஸ்வநாதன் நகர் அருகே பள்ளி மாணவர்களை அழைத்து வந்த ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோ ஓட்டுநர் நடுக்கல்லூரைச் சேர்ந்த மனகாவலப்பெருமாள் (49). சுத்தமல்லி அருகே உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிகளான சுத்தமல்லியை சேர்ந்த யஸ்வனி (15), பழவூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வபாலா (15).முத்து அருள் (15). ஆகியோர் ஆட்டோவில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த மாணவிகள், மற்றும் ஆட்டோ ஓட்டுநர் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மது போதையில் இருந்த ஓட்டுநர் இசக்கியப்பனை சுத்தமல்லி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















