திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழி அருகே குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு, செறுவல்லூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன்(30). என்பவர் ஓட்டி வந்த சுமை வாகனத்தில் 70 மூட்டைகளில் சுமார் 3,150 கிலோ ரேஷன் அரிசியை கேரளத்துக்கு கடத்திச் செல்வது தெரிய வந்தது. வாகனத்துடன் அரிசியைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், பிரவீனை கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய பெண் உள்பட இருவரை தேடி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















