திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக விஷ்வேஷ் சுப்பிரமணிய சாஸ்திரி, இ.கா.ப., (17.06.2026) அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறிய போது தமிழகத்தின் மிகவும் பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க மாவட்டத்தில் பணியாற்றுவதை பெருமையாகக் கருதுகிறேன். இம் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கை முறையாகப் பராமரிப்பதற்கும், குற்றச்சம்பவங்களை தடுப்பதற்கும் அதிக கவனமும், முக்கியத்துவமும் அளிக்கப்படும. மாவட்டத்தில் எழும் எந்தவொரு சவாலையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, காவல்துறை எப்போதும் முன்னிலையில் நின்று செயல்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் நிகழ்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொண்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















