திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் அமைந்துள்ள ஆயுதப்படை அலுவலகம் மற்றும் ஆயுத வைப்பறையை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஐபிஎஸ் அவர்கள் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது ஆயுதப்படை அலுவலகத்தின் செயல்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஆயுதங்களின் பராமரிப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், ஆயுத வைப்பறையில் பாதுகாக்கப்பட்டுள்ள ஆயுதங்களின் நிலை மற்றும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஏற்றுக்கொண்டார். காவலர்களின் ஒழுக்கம், பணித்திறன் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியதுடன், காவல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை பிரிவு காவலர்கள் உடனிருந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















