கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவியர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உத்தரவிட்டிருந்தார். உத்தரவின்படி குளச்சல் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு ஆய்வாளர் திருமதி. சுஜாதா அவர்கள் தலைமையில் நெய்யூர் L. M. S மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் சாலையில் பாதுகாப்பாக நடந்து கொள்வது, போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதன் அவசியம், இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவம், வாகனங்களில் அதிவேகமாக செல்வதால் ஏற்படும் விபத்துகள், செல்போன் பயன்படுத்தியபடி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள், சாலை கடக்கும் போது கவனிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இத்தகைய விழிப்புணர்வு நிகழ்வுகள் மூலம் மாணவர்களிடையே போக்குவரத்து விதிகள் குறித்த புரிதல் அதிகரித்து, விபத்துகளற்ற பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க காவல்துறை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.




















