திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வெங்கடாசலபுரம் அம்மன் கோவில் அருகே காவல் உதவி ஆய்வாளர், முருகன் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த, வெங்கடாசலபுரம் பகுதியை சேர்ந்த முத்துபாண்டி (58). என்பவரை நிறுத்தி சோதனை செய்து பார்த்த போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்து முத்துபாண்டியை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து சுமார் 11 கிலோ புகையிலை பொருட்களையும் , இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















