இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கருமொழி டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த கண்ணன் என்பவரை திருவாடானை காவல்நிலைய சார்பு ஆய்வாளர் கைது செய்தார். கைது செய்யப்பட்ட கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் வகையில் காவல்துறை தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி




















