கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவர் விவசாயம் செய்து வருவதாகவும், அவருடைய மனைவி வனிதா அவர்களுக்கு சொந்தமான மூன்று ஆடுகளையும் விவசாய நிலத்தில் மேய்த்து வளர்த்து வந்துள்ளதாகவும், இந்நிலையில் (25.07.2026) ஆம் தேதி இரவு சுமார் 08.00 மணிக்கு மூன்று ஆடுகளையும் ராமன் அவரது வீட்டின் முன்புறத்தில் உள்ள கொட்டகையில் கட்டிவிட்டு தூங்க சென்றதாகவும், மறுநாள் (26.07.2026) ஆம் தேதி காலை சுமார் 05.30 மணிக்கு வந்து பார்த்தபோது மூன்று ஆடுகளும் காணவில்லை என அருகில் இருந்தவர்களிடமும், அக்கம் பக்கம் கேட்டும், தேடிபார்த்தும் கிடைக்கவில்லை என ராமன் (31.07.2026) ஆம் தேதி காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து மூன்று ஆடுகளை திருடிய இரண்டு குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.




















