திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் கையில் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் Instagram Reels பதிவு செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.இது போன்ற ஆபத்தான மற்றும் அச்சுறுத்தும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், சமூக ஊடகங்களில் பயங்கர ஆயுதங்களுடன் Reels பதிவிடுதல், பைக் சாகசங்களில் ஈடுபட்டு வீடியோக்கள் வெளியிடுதல் போன்ற சட்டவிரோத செயல்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




















