திருநெல்வேலி: திருநெல்வேலி பொன்னாக்குடி பகுதியில் முன்னீர் பள்ளம் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த பொழுது தெற்கு பொன்னாக்குடி செல்லும் வழியில் பொதுமக்கள் சார்பாக வைத்திருந்த மூன்று கண்காணிப்பு கேமராவும் சமத்துவபுரம் அருகே மூன்று கண்காணிப்பு கேமராவையும் மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளதை கண்டனர். இது குறித்து தலைமை காவலர் ஷேக் முபாரக் இஸ்மாயில், முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பொன்னாக்குடியை சேர்ந்த அருணாசலம் மகன் இசக்கிமுத்து (20). சமத்துவபுரத்தை சேர்ந்த மாடசாமி மகன் கோட்டையப்பன் என்ற கோகுல் (19). ராஜா மகன் விஷால் (18). ஆகியோர் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















