திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களின் குழந்தைகளின் உடல், மன மற்றும் அறிவுத் திறன் வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட “தண் பொருநை காவலர் மனமகிழ் மன்றம்” என்ற சிறப்பான பயிற்சி மன்றத்தின் திறப்பு விழா (10.02.2026) அன்று மாலை 6 மணி அளவில் பாளையங்கோட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. வி பிரசன்ன குமார் இ.கா.ப., தொடங்கி வைத்த
இந்த மன்றத்தின் மூலம் சிலம்பம், யோகா, செஸ், வாலிபால், கிரிக்கெட், டெய்லரிங் போன்ற பயிற்சிகள் வாரத்திற்கு இரண்டு முறை நடத்தப்பட உள்ளன. வருங்காலத்தில் இன்னும் பல பயிற்சிகள் இதன் மூலம் கற்றுக் கொடுக்கப்பட இருக்கிறது.
இம்மன்றம் ஆரம்பித்த நோக்கத்தினை பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறிய போது, காவலர் நலன் என்பது பணிச் சீர்திருத்தம் மட்டுமல்ல, அவர்களின் குடும்ப மகிழ்ச்சியும் அதில் அடங்கும் அதற்காகவே இது போன்ற விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டு நடத்தப்படுகிறது என்றும், இந்த கனிவான சிந்தனையே இம் மன்றம் ஆரம்பிக்க அடிப்படை காரணம் என கூறினார். சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட” தண்பொருநை காவலர் மனமகிழ் மன்றம்” ஆரம்பிக்க சீரிய முயற்சி எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு காவலர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் தங்கள் பாராட்டை தெரிவித்துக் கொண்டனர் .
இந்நிகழ்வில் திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், சண்முகம் (CWC),துணை காவல் கண்காணிப்பாளர், க. சுப்பிரமணியன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர், ப.முத்து, ஆயுதப்படை காவல் ஆய்வாளர், த. சுஜாதா ஆகியோர் உடன் இருந்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















