தூத்துக்குடி: சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் (25.05.2026) காலை சொந்த ஊரான எட்டயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரபட்டி கிராமத்திற்கு கோவில் திருவிழாவிற்காக கோவில்பட்டி ரயில் நிலையம் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து எட்டையாபுரம் செல்வதற்காக குடும்பத்தினருடன் ஓரு பேசஞ்சர் ஆட்டோவில் பயணித்தபோது நகை மற்றும் செல்போன் வைக்கப்பட்டிருந்த ஹேண்ட் பேக் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்துள்ளது.
பின்னர் இது குறித்து மேற்படி பெண் காணாமல் போன நகையை மீட்டு தரும்படி எட்டயபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சுந்தரபாண்டியன், எட்டையபுரம் காவல் ஆய்வாளர் திரு. மணிகண்டன் மற்றும் போலீசார் உடனடியாக ஆட்டோ பயணித்த பாதையில் ரோந்து சென்று ஆய்வு செய்ததில் மேற்படி தவறவிட்ட ஹேண்ட் பேக் சாலையில் கண்டெடுக்கப்பட்டது. மேற்படி நகையை தவறவிட்ட ஒரு மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு அதனை மீட்ட காவல்துறையினரை விளாத்திகுளம் டிஎஸ்பி திரு. சுந்தரபாண்டியன் பாராட்டு தெரிவித்து நகையை தவறவிட்ட குடும்பத்தினரிடம் நகை பையை பத்திரமாக ஒப்படைத்தார்.



















