திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம், டவுன் நயினார்குளம் ரோடு பகுதியில் அலுவலகம் நடத்தி வரும் மகாராஜா நகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் பாலாஜி(49). என்பவருக்கும் பேட்டை அன்னதான விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த செல்வி(45). என்பவரின் கணவருக்கும் இடையே உள்ள இடப்பிரச்சனை சம்பந்தமாக டவுன் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் (02.11.2024)-ஆம் தேதி அந்த கடையின் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட வாய் தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட இரு தரப்பினரும் (03.11.2024)-ஆம் தேதி கொடுத்த புகாரின் பேரில் இரு தரப்பை சேர்ந்த 06 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து டவுன் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















