திருநெல்வேலி: திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர், முனைவர். ரா.திருநாவுக்கரசு, இ.கா.ப., தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுக்கும் பயிற்சி வகுப்பு (20.06.2026)-அன்று தூத்துக்குடி மாவட்டம் பேராவூரணியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் நடத்தப்பட்டது. பயிற்சி வகுப்பில் சரகத்திற்குட்பட்ட நான்கு மாவட்ட அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர்கள் 20 பேரும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான குற்றங்களை மேற்பார்வையிடும் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் நான்கு பேரும் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு அரசு சட்ட வல்லுனர்கள் மூலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற வழக்குகளை கையாள்வது. திறம்பட வழக்கு புலன் விசாரணை மேற்கொள்வது, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணத் தொகை பெற்று வழங்குவது குறித்து விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது. இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்பிற்கான ஏற்பாடுகளை பேரூரணி காவலர் பயிற்சிப் பள்ளி முதல்வர், M.நாகஷங்கர், (கூடுதல் காவல் கண்காணிப்பாளர்) மற்றும் சரக பணியிடை பயிற்சி மைய பொறுப்பு துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் மேற்கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















