திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., அறிவுறுத்தல் படி, சைபர் குற்றங்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் சொக்கலால் மேல்நிலைப் பள்ளியிலும், அம்பாசமுத்திரம் ஏ.வி.ஆர்.எம். வேலாயுதம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், முருகன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
விழிப்புணர்வு நிகழ்வில் பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதால் ஏற்படக்கூடிய விளைவுகள், அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகள் மற்றும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். மேலும், இது போல், உதவித்தொகை மோசடி மற்றும் நிதி மோசடி தொடர்பான இணைய வழி குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 1930 என்ற இலவச உதவி எண்ணையும், https://cybercrime.gov.in� என்ற இணையதள முகவரியையும் பயன்படுத்தலாம் என்றும் கூறினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















