தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெண் ஒருவரை கொலை செய்து அவரிடமிருந்து தாலி செயின், கொலுசு மற்றும் பணத்தை திருடி சென்றதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் காமாட்சி காலனியை சேர்ந்த ராஜவேல் மகன் சந்தோஷ் குமார் @ அழகு சுந்தரம் (37). மீது ஆதாய கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ் வழக்கின் விசாரண தென்காசி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றம் நிரூபணம் ஆனதால் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 20,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















