திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் குருநாதன் கோயில் விலக்கு பகுதியில், சிலர் கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நிற்பதாக நகரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற நகரம் காவல்துறையினர் அரிவாளுடன் நின்ற 3 பேரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் திருநெல்வேலி நகரம் பகுதியைச் சேர்ந்த சரவணன்(19). முகமது சுல்தான் தெளபிக்(20). அபிஷேகப்பட்டியைச் சேர்ந்த ஜாண் ரெக்சன்(19). என்பது தெரிய வந்தது. விசாரணையில் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், ரெளடிகள் போல் காட்டிக்கொள்ள அரிவாளுடன் சுற்றுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அரிவாளை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















