அரியலூர்: அரியலூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக திருமதி ந. மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் (01.06.2026) அன்று பொறுப்பேற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, மாவட்ட காவல்துறை சார்பில் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்த காவல் கண்காணிப்பாளர், மாவட்டத்தின் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த பணிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.
இந்த சந்திப்பின் போது, மாவட்ட வளர்ச்சி, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அரசு நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுவது தொடர்பாக இரு அதிகாரிகளும் கலந்துரையாடினர். அரியலூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக திருமதி ந. மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் (01.06.2026) அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.



















