அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் (18.05.2026)அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., அவர்களின் தலைமையில் காவல்துறையினருக்கான புலனாய்வு சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் 40 காவல்துறையினர் கலந்து கொண்டு, வழக்குகள் தொடர்பான புலனாய்வு நடைமுறைகள், சாட்சிகள் சேகரிக்கும் முறை, ஆதாரங்களை பாதுகாப்பது, குற்ற விசாரணைகளில் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், குற்றவியல் வழக்குகளை துல்லியமாகவும் விரைவாகவும் விசாரிக்கும் திறனை மேம்படுத்துவது குறித்தும் காவல்துறையினருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த சிறப்பு பயிற்சி வகுப்பு காவல்துறையினரின் புலனாய்வு திறனை மேம்படுத்தும் வகையில் பயனுள்ளதாக அமைந்தது.




















