விக்கிரமங்கலம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட 7 COTPA வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 495 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இன்று அதிகாரிகள் முன்னிலையில் அழிக்கப்பட்டன. சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் நடவடிக்கையாக இந்த அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காவல்துறையினர் மற்றும் தொடர்புடைய துறை அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்பான முறையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் முழுமையாக அழிக்கப்பட்டன.
மேலும், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பொதுமக்களும் இது போன்ற சட்டவிரோத செயல்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.




















