நாமக்கல் : நாமக்கல் மாவட்ட ஜேடர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட வழக்கமான ரோந்து பணியின் போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த மணிகண்டன் (52). என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து சுமார் 2.1 கிலோ கிராம் அளவிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக ஜேடர்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, எதிரியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் கையிருப்பில் வைத்திருப்போர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.




















