திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், ஆலங்குளம் மெயின் ரோடு தாளார்குளம் விலக்கு அருகே சேரன்மகாதேவி துணை வட்டாட்சியர், புஷ்பலதா வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ஆலங்குளம், கரும்புளியூத்து பகுதியைச் சேர்ந்த ஜெபஸ்டின் (30). என்பவர் ஓட்டி வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, அனுமதி இன்றி குண்டு கற்களை ஏற்றி இருந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து மண்டல துணை வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் முக்கூடல் காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் வழக்கு பதிவு செய்து ஜெபஸ்டினை (13.04.2026) அன்று கைது செய்து அவரிடம் இருந்து 20 யூனிட் குண்டுகற்கள் மற்றும் 1 டாரஸ் லாரியை பறிமுதல் செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















