திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே ஆலடியூர் கீழத் தெருவைச் சேர்ந்த நிதீஸ்குமார் (21). அவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், ரவிகுமார் ஆகியோர் ஒரே இருசக்கர வாகனத்தில் தெருவுக்குள் ஞாயிற்றுக்கிழமை வேகமாகச் சென்றுள்ளனர். அவர்களை, அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் மகன் குமார் (45). முருகன் மனைவி லட்சுமி, அவரது மகன் ஆறுமுகம் உள்ளிட்ட சிலர் தட்டிக் கேட்டுள்ளனர்.
அப்போது, நிதீஸ்குமார் உள்ளிட்ட 3 பேருடன் சுரேந்தர் (24). என்பவரும் சேர்ந்து எதிர்தரப்பை சேர்ந்த 3 பேரையும் தாக்கியுள்ளனர். இது குறித்து குமார் அளித்த புகாரின் பேரில், விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து நிதீஸ்குமார், ரவிக்குமார், சுரேந்தர் ஆகியோரை கைது செய்தனர். மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்