மதுரை: மதுரையில் நடைபெறவுள்ள அருள்மிகு கள்ளழகர் புறப்பாட்டை முன்னிட்டு (29.04.2026) அன்று போக்குவரத்தில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரையிலிருந்து அழகர்கோவில் வழியாக மேலூர் செல்லும் வாகனங்கள் நாயக்கன்பட்டி சந்திப்பிலிருந்து மாற்று வழிகளில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் மேலூரிலிருந்து மதுரை நோக்கி வரும் வாகனங்களுக்கும் மாற்று வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பெரிய திரளான பக்தர்கள் வருகையை முன்னிட்டு, பல இடங்களில் தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தனித்தனியாக நிறுத்துமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், தற்காலிக பேருந்து நிறுத்துமிடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் (29.04.2026) அன்று பிற்பகல் 01.00 மணி வரை அழகர்கோவில் வளாகம் வரை அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் போக்குவரத்து மாற்றங்களை பின்பற்றி காவல்துறைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்


















