கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததில் அப்பேருந்தில் பயணம் செய்த இரண்டு நபர்களிடம் சுமார் 18 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.



















