திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (30.04.2026) தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பு ஆய்வாளர் திரு.மனோகரன் அவர்கள், வேடசந்தூர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.வீரபாண்டி அவர்கள், சாணார்பட்டி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.ஜோதிமணி அவர்கள், திண்டுக்கல் நகர் காவல் கட்டுப்பாட்டு அறை சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.இளங்கோவன் அவர்கள், ஆயக்குடி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.கோட்டை மலை அவர்கள், கன்னிவாடி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன் அவர்களை (30.04.2026) அன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்கள் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















