திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே பாறை குளத்தை சேர்ந்த பாலமுருகன் (36) கடந்தாண்டு தனது (13). வயது மகளிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பெறப்பட்ட புகாரின் பேரில் திருநெல்வேலி அனைத்து மகளிர் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட இவ் வழக்கு
திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்றம் சிறுமியின் தந்தையான குற்றவாளி பாலமுருகனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.
இவ்வழக்கின் நீதிமன்ற விசாரணை துரிதமாக நடைபெற, கண்காணிப்பு செய்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், M. சண்முகம், (CWC) திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் K. ரகுபதி ராஜா, காவல் ஆய்வாளர், மாரியம்மாள், தலைமை காவலர், பார்வதி @ பானு, ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V. பிரசன்ன குமார்,இ.கா.ப., பாராட்டினார்.
மாவட்ட காவல்துறை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்


















