மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பகுதியில் உள்ள மாதாந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆத்தங்கரைப்பட்டி கிராம மக்கள், கோவில் பெயர் மாற்றம் மற்றும் பூசாரி செயல்பாடுகள் குறித்து குற்றச்சாட்டு முன்வைத்து கோவில் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுமலை கிராம மக்கள் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், இருதரப்பினரிடையே வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி



















