திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம், வசவப்பபுரத்தை சேர்ந்த சுடலைமுத்து மகன் மாயாண்டி என்ற மதன் (21). கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் சீவலப்பேரி காவல் ஆய்வாளர், சுபாஷ் இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விடுத்த வேண்டுகோள் படி, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. V. பிரசன்ன குமார், இ.கா.ப., பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், மாயாண்டி என்ற மதனை பாளையங்கோட்டை மத்திய சிறையில் (28.04.2026) அன்று அடைத்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்கள் நடைபெறாமல் இருக்கவும் நிகழாண்டில் மட்டும் இதுவரை 46 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















