விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கோவிலாங்குளம் கண்மாயின் நீர்பரப்பு பகுதியில் சோலார் பிளாண்ட் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மற்றும் விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு புறம்போக்கு நிலத்தில் இந்த திட்டம் அமைய இருப்பதாலும், நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்ற அச்சத்தாலும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, தாசில்தார் சந்திரசேகரன் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாய சங்க நிர்வாகிகள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கோவிலாங்குளம், உடுப்புகுளம், ஆவாரம்பட்டி கிராம மக்கள் பங்கேற்றனர். இருதரப்பினரின் கோரிக்கைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதியளித்தார். எனினும், திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம் என மக்கள் எச்சரித்து வெளியேறினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி


















