திருச்சி : திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2024ஆம் ஆண்டு மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், சரித்திர பதிவேடு குற்றவாளியான முரளிராஜாவுக்கு (30.04.2026) ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



















