மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு, அருள்மிகு ஸ்ரீ ஜனக நாராயண பெருமாள் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தலைவர் எஸ்.எஸ்.கே. ஜெயராமன், நிர்வாக அதிகாரி செல்வகுமார், கவுன்சிலர் சத்திய பிரகாஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஜெசி ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், தூய்மை பணியாளர்கள் வைகை ஆற்றுப் பகுதியில் விரிவான சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். சனீஸ்வரன் கோவில் மற்றும் வட்ட பிள்ளையார் கோவில் அருகே ஜேசிபி இயந்திரம் மூலம் ஆற்றில் உள்ள பள்ளங்கள் மூடப்பட்டு, பல்வேறு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பக்தர்கள் பாதுகாப்பாக வழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி



















