மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம், கொட்டாம்பட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த பொதும்பொண்ணு (47).க/பெ கணேசன், ஒட்டக்கோவில்பட்டி, கொட்டாம்பட்டி, (வலையர்) என்பவர் தனது வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சிறப்பு காவல் குழு சோதனை மேற்கொள்ளச் சென்ற போது, குற்றவாளி வீட்டை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அய்யாபட்டி கிராம VAO மற்றும் காவல் குழுவினர் முன்னிலையில் வீட்டின் பூட்டு திறக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 74.368 கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















