திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி கேசவனேரியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (41). என்பவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் காப்பர் வயர் திருடு போனதாக (30.5.2026) அன்று பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் பணகுடி காவல் உதவி ஆய்வாளர், சோபியா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வடலி விளையைச் சேர்ந்த ஆல்வின் (27). என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்

















