மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை மற்றும் கொட்டாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மேற்கொண்ட சோதனையில், முருகன் (40). மற்றும் அடைக்கண் (26). ஆகியோர் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து மொத்தம் 32 கிலோ 25 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் 91760 79100 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்றும், தகவல் அளிப்போரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.




















