கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஊத்தங்கரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது, அம்மன் கோயில்பதி டாஸ்மாக் அருகில் உள்ள குற்றவாளியின் பெட்டி கடையில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் இருந்தது. மதுபானங்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.



















